![]() |
அமரர் புவனேஸ்வரி ஸ்ரனிஸ்லோஸ் - (ஓய்வுபெற்ற ஆசிரியை) மண்ணில் 24.07.1927 விண்ணில் 19.06.2015 |
அன்னையாய் எப்போதும்
எங்களுக்கெல்லாமாய்
இன்னல்க ளகற்றி இயல் வாழ்வை
இங்கிதமாய் செப்பனிட்டாய்!
தாயாக மாமியாக சோதரியாக மச்சாளாக நண்பியாக
மாணாக்கருக்கு குருவாக பேரர்கட்குப் பாட்டியாக
குடும்பத் தலைவியாக அக்கறையுள்ள சமூகப்பற்றாளராக
பெரும் இறை பக்தையாக பரிணமித்தீர் இப் பூவுலகில்!
உங்கள் பெரும் பணிகள் இப்பரணிக்குப் போதுமென்றோ
விதியின் கணக்கால் சிவபதமடைய
உங்கள் சமூகத்தோர் உள்ளவரை
உங்கள் நாமம் அழியாது ஏங்குமே எப்போதும்!
அன்புடன் மகன் : ஸ். செல்வீந்திரா