Obituary - Battinews.com
Sunday, March 9, 2025
Friday, January 17, 2025
மரண அறிவித்தல் - அஜந்தன் திரிஷான்
பிரித்தானியா லண்டன் Ilford ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரிஷான் அஜந்தன் அவர்கள் 06-01-2025 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், அஜந்தன் சத்தியா தம்பதிகளின் பாசமிகு மகனும், பூபாலப்பிள்ளை பத்மநாதன்(சொலிசிற்றர்- லண்டன், சட்டத்தரணி- இலங்கை, அவுஸ்திரேலியா, மனித உரிமையாளர்- இலங்கை), சுபத்திராதேவி பத்மநாதன்(ஓய்வுநிலை ஆசிரியை- அர்ச் மிக்கேல் கல்லூரி, மட்டக்களப்பு, றோயல் கல்லூரி- கொழும்பு) தம்பதிகள், காலஞ்சென்ற கதிரேசன் கந்தப்பன் (ஓய்வுநிலை அதிபர்), வள்ளிநாயகி கந்தப்பன் தம்பதிகள், காலஞ்சென்ற திரு.திருமதி கணேசலிங்கம் தம்பதிகள்(தமிழ் விடுதலைக் கூட்டணி- பாரளுமன்ற உறுப்பினர்), காலஞ்சென்ற திரு.திருமதி சங்காரவேல்(ஓய்வுபெற்ற மாவட்டச் செயலாளர்- மட்டக்களப்பு) தம்பதிகள், திரு.திருமதி காரளசிங்கம்(கிராம சேவை உத்தியோகத்தர்) தம்பதிகள், அன்னலட்சுமி சிவலிங்கம் தம்பதிகள்(ஓய்வுபெற்ற ஆசிரியை), காலஞ்சென்ற தவமணி தியாகராஜா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
உதயா, கீதா, நந்தினி, மாலா, ஜெயந்தினி, காலஞ்சென்ற தர்மலிங்கம், கிருபா, லவக்குமார், மதன், சங்கர், சுகுமார், சுமன், சுதன், சுகந்தன், சுஜிவ், அம்ஜித்குமார், கமலராஜா, நிரோஜன், ரவிராஜ், முகுந்தன், முரளி, குகன், வாசுகி, வாஜிதா, சஞ்ஜித் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
பாபு, ஷோபனா, சுமி, பிரகாஷினி, பிருதிவினி, நிலுஷினி, கார்த்திகா, கிருஷ்ணி ஆகியோரின் அன்பு மருமகனும்,
பிரியந்தன், லவண்யா, துஷியந்தன், கிர்ஷான், பிரமிகா, தர்மிகா, ஷாகரி, சுருதி, அஸ்வின், கோபிஷான், கேசகி, ஹரிஸ், சாகாஸ், கிருஷிக்கா, கரிக்ஷன், சர்வின் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
சாந்தாதேவி விக்னேஸ்வரன், காலஞ்சென்ற ஜெயராணி சிவபாலன், செல்லையா நந்தகுமார், இந்திராணி இராஜேந்திரன், காலஞ்சென்ற செல்லையா கிருஷ்ணராஜா, செல்லையா லோகநாதன், காலஞ்சென்ற நளேந்திரன் ஜமுனா மகாலிங்கசிவம், சியாமளாதேவி திருச்செல்வநாதன், கனகம்மா ஆகியோரின் பெறாவழிப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு : +447405997114 / +447405644694
Labels:
மரண அறிவித்தல்
Friday, December 20, 2024
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - இளையதம்பி குழந்தைவேல் .

இத்தரணியில் எங்களுடன் மானிட உருவில் குடியிருந்து எமக்காகவே வாழ்நாளின் ஒவ்வொரு நொடிகளையும் அர்ப்பணித்து பல தியாகங்களை செய்து எங்கள் குடும்பத்தின் ஓர் கலங்கரை விளக்காய் திகழ்ந்து ,வழிகாட்டி, வழிப்படுத்தி சமுகந்தனில் நற்பிரஜையாய் " ஓர் உன்னதமான தந்தை" நீங்கள் அப்பா. வழமை போன்று நீங்கள் புதிய ஆண்டுத் தொடக்கமான 2024.01.01 அன்று தங்கள் இஷ்ட தெய்வமான ஸ்ரீ சகலகலையம்பாளின் ஆலய முன் சந்நிதியில் பிரார்த்தனையின் போது தங்களின் ஜீவாத்மாவானது பரமாத்மாவுடன் கலந்து தெய்வத்திற்குள் தெய்வமான நிகழ்வானது அம்பாள் மீது நீங்கள் கொண்ட அதீத தெய்வபக்தியை எமக்கு உறுதிப்படுத்தியது.
இத்தரணியில் உங்களது கடமைகளையும் , பொறுப்புக்களையும் செவ்வென யாதுமோர் குறைவின்றி மிகச்சிறப்பான முகாமைத்துவ , தலைமைத்துவ மற்றும் மனித நேயப்பண்புகளுடன் நிறைவேற்றி வாழ்ந்த மானிட தெய்வம் நீங்கள் அப்பா. எங்களின் ஒவ்வொரு நல்லசெயல்களிலும் , வளர்ச்சியிலும் உங்களின் ஆலோசனைகளும், வழிகாட்டல்களும் மற்றும் நிதிப்பங்களிப்புக்களும் எங்களுக்கு தவறியதேயில்லை அப்பா.
சமூகந்தனில் உங்களுக்கிருந்த நன்மதிப்பையும், அந்தஸ்த்தினையும், சுயமரியாதையையும் தங்கள் இறுதி நிகழ்வு தினம் எமக்கு புலப்படுத்தியது. வாழ்க்கையென்பது இந்த விநாடி மட்டுமே உண்மையென்பதும் மறு விநாடி பொய்யென்பதனையும் நீங்கள் நிரூபித்து கடவுளின் திருவடிதனில் சென்றுள்ளீர்களே அப்பா.
எங்கள் குடும்பத்தின் குல விளக்காக திகழ்ந்து நின்று குடும்ப வளர்ச்சிக்கு உறுதியான கொழுகொம்பாகவும், முதுகெலும்பாகவும் பெருமை சேர்த்து திடீரென இறைவனடி சேர்ந்தமையை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் இறைவனின் நியதியையும், கால பகவானின் காலத்தின் கட்டாயத்தினையும் நாங்கள் ஏற்றுக்கொண்டு உங்கள் ஜீவாத்மாவனது பரமாத்மாவுடன் சிறப்புற கலந்து சாந்தி பெற்று தெய்வத்திற்க்குள் தெய்வமாக எங்களின் காவல்தெய்வமாக நின்று ஆசீர்வதித்து எமைக்காக்க எல்லாம் வல்ல தங்களின் ஸ்ரீ சகலகலை அம்பாளினை நாங்கள் ஒவ்வொருவரும் பிரார்த்திக்கின்றோம் அப்பா.
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !
என்றும் உங்கள் நினைவுகளுடன் வாழும் அன்பு மனைவி , பிள்ளைகள் , மருமக்கள், பேரப்பிள்ளைகள் , சகோதர சகோதரிகள் , மச்சாள்மார் , மச்சான்மார் மற்றும் உற்றார் உறவினர்கள்.
பிரதானவீதி , திருக்கோவில் 02
0672265106
0771510588
Friday, November 29, 2024
Sunday, November 17, 2024
Saturday, October 12, 2024
Wednesday, September 11, 2024
13 ஆம் ஆண்டு நினைவஞ்சலி : அமரர் தவசிப்பிள்ளை இராசையா .

நீங்கள் பொன்னுடல் விட்டு புகழுடலேந்தி 13 ஆண்டுகள் பறந்து விட்டது தெய்வமே !
ஆனால் தாங்கள் பொன்னுடலை நீத்தது எமக்கு நேற்றுப்போல் மனதில் நிழலாடுதே அப்பாவே !
எங்கள் குலவிளக்காக எம்மை வழிநடத்தி எங்களோடே வாழ்கின்றீர் தெய்வமே !
உங்கள் ஆத்மா என்றென்றும் சாந்தியடைய வேண்டி பிரார்த்திக்கின்றோம் அப்பாவே !
ஒம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
என்றும் உங்கள் நினைவுடன் வாழும் மனைவி, மக்கள், மருமக்கள்,பேரப்பிள்ளைகள், உடன்பிறப்புக்கள், உறவினர்கள்.
பிரதான வீதி, பட்டிருப்பு,
களுவாஞ்சிகுடி.
Labels:
நினைவஞ்சலி
Saturday, August 31, 2024
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி : அமரர் சிவானந்தராஜா நர்மதன் (ஜனா)
உங்கள் வாழ் நாள் சேவைகள் யாவும் வறிய மக்களுக்காக எமது நாட்டிலும் அன்னிய வறிய நாடுகளில் வாழ்கின்ற ஏழை மக்களுக்காகவும் உங்கள் வாழ்க்கையே அற்பணித்தீர்கள். மக்கள் சேவை மகேசன் சேவை என்பதற்கேற்ப உங்கள் வாழ்க்கையை இறைவன் அமைத்திருந்தான். எப்பொழுதும் உங்கள் அருகே இருப்பேன் என்று ஆறுதல் வார்த்தை கூறிய நீங்கள் சடுதியாக 10.09.2023ல் உயிர் நீத்த அதிர்ச்சியிலிருந்து துடிதுடித்துப்போன நாங்கள் ஒவ்வொரு நாளும் உங்களை நினைத்து அழுத வண்ணம் இருக்கின்றோம். எங்களது கண்களில் குளமாகும் கண்ணீரை உங்களுக்கு காணிக்கையாக்கிப் பிரார்த்திக்கின்றோம்.
இவ்வுலகிற்கு நீங்கள் ஒருவர். ஆனால் எமக்கு நீங்களே உலகம். உங்களை தன்னோடு இருக்க அழைத்த இறைவன் அவரது மார்போடு அணைத்துக்கொள்வாராக. என்றுமே எங்கள் கண்ணீர்ப் பூக்கள் உங்கள் பாதங்களுக்கு சமர்ப்பணம். மனிதராய்ப் பிறந்த எவரையும் ஏமாற்றியதில்லை மரணம். பெற்றோர், மனைவி, பிள்ளைகள் உயிருடன் இருக்கும்போது எதிர்பாராமல் நிகழ்ந்த உங்கள் பிரிவு எங்களை மட்டுமல்ல இரத்த உறவுகளையும் நிலைகுலையச் செய்துவிட்டது. எங்கள் குடும்பத்தின் சகல நிம்மதியையும் தொலைத்துவிட்டுத் தவிக்கின்றோம். இந்நிலை என்றும் மாறப்போவதுமில்லை மறையப் போவதும் இல்லை. உங்கள் ஆத்ம சாந்திக்கு எமது பிரார்த்தனைகள்.
முதலாம் ஆண்டு நிறைவு நினைவஞ்சலிக் கிரிகை 10.09.2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை எமது இல்லத்தில் நடைபெறும். இந்த ஆத்ம சாந்திப் பிரார்த்தனையில் கலந்து கொள்ள வருகை தருமாறு எங்கள் உறவுகளையும் நண்பர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.
மனைவி தனுஜாவும் பிள்ளைகளும்
தந்தை சிவானந்தராஜா
சகோதரி சிமீத்தா செல்வச்சந்திரன்
குடும்பத்தினர்.
இல: 43, பழைய கல்முனை வீதி,
கல்லடி, மட்டக்களப்பு
தொலை பேசி- 065-2227456' & 077-0651787
Labels:
நினைவஞ்சலி
Sunday, August 25, 2024
மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி : அமரர் யோசப் நவரெட்ணம்
ஆண்டுகள் மூன்று ஆனாலும் அகலுமா நெஞ்சைவிட்டு உங்களுடைய நினைவுகள். அப்புச்சி பாசத்தின் உறைவிடமே, பண்பின் ஒளிவிளக்கே கூடி வாழ்ந்த எம்மை எல்லாம் தவிக்கவிட்டு கைவிட்டு எம்மை எல்லாம் ஆறாத்துயரில் விட்டு விட்டு இறைபதம் சென்றது ஏனோ அப்புச்சி , அன்பினால் , பண்பினால் எங்கள் உள்ளங்களில் குடியிருக்கும் அப்புச்சி நாட்கள், மாதங்கள், வருடங்கள் செல்ல செல்ல உங்களுடன் கழித்த நாட்களை நினைத்து நினைத்து வாடுகின்றோம்.
எங்கள் அன்பு அப்புச்சிக்கு எமது கண்ணீர்த் துளிகளை தினம் தினம் காணிக்கையாக்கி என்றும் உங்கள் நினைவுகளுடன் பரிதவிக்கும் மனைவி , பிள்ளைகள் , மருமக்கள் , பேரப்பிள்ளைகள்.
எங்கள் அன்பு அப்புச்சிக்கு எமது கண்ணீர்த் துளிகளை தினம் தினம் காணிக்கையாக்கி என்றும் உங்கள் நினைவுகளுடன் பரிதவிக்கும் மனைவி , பிள்ளைகள் , மருமக்கள் , பேரப்பிள்ளைகள்.
தகவல்
குடும்பத்தினர்
வந்தாறுமூலை
Labels:
நினைவஞ்சலி
Subscribe to:
Posts (Atom)
Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka