Saturday, July 16, 2022

மரண அறிவித்தல் : திருமதி தனலெட்சுமி பிரசாத்

 


மட்டக்களப்பு நொச்சிமுனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி . தனலெட்சுமி பிரசாத் அவர்கள் 16-07-2022 ம் திகதி சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ் சென்ற மயில்வாகனம் பிரசாத் (ஓய்வு பெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ் சென்ற டாக்டர் தம்பிராஜா நாகரெத்தினம் தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ் சென்ற முகாந்திரம் உடையார் மயில்வாகனம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ் சென்றவர்களான இராஜேந்திரம், கருணைலெட்சுமி , அச்சுதானந்தன், அகிலாண்டேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் நிருக்ஷா (லண்டன்) , நிறோசினி (ஆசிரியை - மட்/விவேகானந்தா மகளிர் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும் பாலமுரளி (லண்டன்) ஹரிகரராஜ் (பிரதி கல்விப்பணிப்பாளர் - மட்டக்களப்பு கல்வி வலயம்) ஆகியோரின் அன்பு மாமியாரும் கீர்த்திக், லக்ஷனா, ஹரிணி, கார்த்திகேயன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் 
கலாநிதி பிரேம்குமார் (சிரேஷ்ட விரிவுரையாளர் - கிழக்கு பல்கலைக்கழகம்) 
காலஞ் சென்ற கிருஷ்ணகுமார், உருத்திரகுமார்(ஸ்கொட்லாந்து) , சந்திரகுமார்(UK) , ஆகியோரின் சின்னம்மாவும் மிருணாளினி , றுகாளினி ஆகியோரின் மாமியாரும் 
அபர்ணா (ஆசிரியை - நாவற்குடா தருமரெத்தினம் வித்தியாலயம்) 
தெய்வேந்திரகுமாரி (ஓய்வு பெற்ற ஆசிரியை) , 
ஸ்ரீ ரஜனி (ஸ்கொட்லாந்து) அகிலா(UK) ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிச் சடங்கு 17-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 4.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று கல்லடி - உப்போடை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அறியத்தருகின்றோம்.


          தகவல் - குடும்பத்தினர்  
            0652225716  ,  0779221931

0 comments:

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka