அன்பு பாசம் பண்பு பக்தி. பரிவு ஒழுக்கம் பணிவு என்பவற்றில்
அனைத்து சமய சமூக பொது அமைப்புக்களும் உறவுகளும்;
அவதானித்து சுதந்திரமாக பதிந்த புள்ளிகள் நூற்றுக்கு நூறு!
அகவை 101ஐ ஆரோக்கியமாகவே கடந்ததற்கு வைத்தியர்களும்
அதே நிலைப்பாட்டை வெளியிட்டது வெட்ட வெளிச்சம்!
அணையா விளக்காக இருந்து மெழுகுவர்த்தியாய் மாறி
அனைத்தையும் அப்பழுக்கின்றி செய்து எங்களை ஆட்கொண்ட
அன்புக்கு இலக்கணம் தந்த அருமையான உறவின் உச்சமே!
அழுதும் தீராத துயரும்;; தாக்கமும் எமக்கும் நூற்றுக்கு நூறு!
ஒழுக்க சீலராகவே வாழ்ந்ததால் 101வது வயதை பூர்த்தி செய்து
03.04.23ல் அமரத்துவமடைந்த எங்கள் குடும்ப ஒளி விளக்கு வே.கணபதிப்பிள்ளை அவர்களின் ஆத்மசாந்தி வேண்டி 04.05.2023 வியாழக்கிழமை நண்பகல் அன்று பெரியகல்லாறு -01 எல்லை வீதியில் உள்ள இல்லத்தில் நடைபெறும் 31ம் நாள் கிரியைகளில் கலந்து கொண்டு அன்னாரின் ஆத்மசாந்திக்காகப் பிரார்த்த்திக்குமாறும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறும் வினயமாக வேண்டிக் கொள்ளுகின்றோம்!.
அன்னாரின் இறுதிக்காலத்திலும். இறுதிச் சடங்கு வரையிலும்
எம்மோடிருந்து ஆறுதல் வழங்கி அனைத்து வகையிலும் சிரமங்கள் தாங்கி சிரத்தையுடன் எமக்கு பொருத்தமான சிறப்பான பங்களிப்புச் செய்து எங்களை தேற்றிய உங்களை இத் தருணத்தில் மிகுந்த நன்றி உணர்வுடன் நினைவு கூருகின்றோம் ஆயிரமாயிரம் நன்றிகள்!
உபயங்கள் அன்பளிப்புக்கள் என்பவற்றை முழுமையாக தயவுசெய்து தவிர்த்து உளப்பூர்வமாக அன்னாரின் ஆன்ம ஈடேற்றத்திற்கான கிரியைகளில் பங்கேற்றுஆத்மசாந்திக்கு மனப்பூர்வமாக பிரார்த்திப்பதே உங்களின் மேலான சிறந்த ஒத்துழைப்பாக எமக்கு அமையும்.
மேலான நன்றியுணர்வுடன்
குடும்பத்தினர்
067 2221452