Tuesday, December 5, 2023

மரண அறிவித்தல் : அமரர் கணபதிப்பிள்ளை பரராசசிங்கம்



குருமண்வெளியை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட அதிபரும் எழுத்தாளருமான கணபதிப்பிள்ளை பராசசிங்கம் அவர்கள் ஞாயிற்றுகிழமை (03.12.2023)அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை பிள்ளையம்மா ஆகியோரின் அன்பு மகனும், தங்கம்மா (ஓய்வு பெற்ற ஆசிரியர்) இன் அன்புக்கணவரும், காலஞ்சென்ற காசிநாதன் மூத்தபிள்ளை ஆகியோரின் அன்பு மருமகனும், வரதாஞ்சலி குகதாசன் (ஓய்வு பெற்ற கல்விக்கல்லூரிவிரிவுரையாளர்) கீதாஞ்சலி செல்வரெட்ணம்(அமெரிக்கா) செவ்வேன்(U.K) காலஞ்சென்ற டீன் சுசி சிங்கம்(UK) வேதாஞ்சலி கோகுலன் (விசேட வைத்திய நிபுணர் அவுஸ்ரேலியா) யுகசீலன் ஆகியோரின் அன்பு தந்தையாரும் குகதாசன் (ஓய்வு பெற்ற ஆசிரியர்) செல்வரெட்ணம் (விசேட வைத்திய நிபுணர் அமெரிக்கா) கோகுலன் (பொறியியலாளர் அவுஸ்ரேலியா) சுசிலதா (UK) பாமினி ஆகியோரின் அன்பு மாமனாரும், அருண், மிதுன், ஆதித்யா, ஹரி, மயூருன, சரண், தருண், றஸ்மிஷரி, ஷேசாஹரிணி ஆகியோரின் பாட்டனாரும், எசக்கி அருண் அவர்களின் பூட்டனாரும், காலஞ்சென்ற மூத்தம்மா, அருளம்மா (ஓய்வு பெற்ற ஆசிரியை ) காலஞ்சென்ற வள்ளிம்மை காலஞ்சென்ற லீலாவதி, பசுபதி, கோசலை, பாக்கியராசா (நியூசிலாந்து) ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் புதவுடல் மட்டக்களப்பு இல்லத்தில் வைக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை (05.12.2023) அன்று 10 மணியிளவில் எடுத்துச் செல்லப்பட்டு குருமண்வெளி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ்வறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தகவல் குடும்பத்தினர்

0750295094

0 comments:

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka