Saturday, August 31, 2024

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி : அமரர் சிவானந்தராஜா நர்மதன் (ஜனா)


உங்கள்‌ வாழ்‌ நாள்‌ சேவைகள்‌ யாவும்‌ வறிய மக்களுக்காக எமது நாட்டிலும்‌ அன்னிய வறிய நாடுகளில்‌ வாழ்கின்ற ஏழை மக்களுக்காகவும்‌ உங்கள்‌ வாழ்க்கையே அற்பணித்தீர்கள்‌. மக்கள்‌ சேவை மகேசன்‌ சேவை என்பதற்கேற்ப உங்கள்‌ வாழ்க்கையை இறைவன்‌ அமைத்திருந்தான்‌. எப்பொழுதும்‌ உங்கள்‌ அருகே இருப்பேன்‌ என்று ஆறுதல்‌ வார்த்தை கூறிய நீங்கள்‌ சடுதியாக 10.09.2023ல்‌ உயிர்‌ நீத்த அதிர்ச்சியிலிருந்து துடிதுடித்துப்போன நாங்கள்‌ ஒவ்வொரு நாளும்‌ உங்களை நினைத்து அழுத வண்ணம்‌ இருக்கின்றோம்‌. எங்களது கண்களில்‌ குளமாகும்‌ கண்ணீரை உங்களுக்கு காணிக்கையாக்கிப்‌ பிரார்த்திக்கின்றோம்‌.

இவ்வுலகிற்கு நீங்கள்‌ ஒருவர்‌. ஆனால்‌ எமக்கு நீங்களே உலகம்‌. உங்களை தன்னோடு இருக்க அழைத்த இறைவன்‌ அவரது மார்போடு அணைத்துக்கொள்வாராக. என்றுமே எங்கள்‌ கண்ணீர்ப்‌ பூக்கள்‌ உங்கள்‌ பாதங்களுக்கு சமர்ப்பணம்‌. மனிதராய்ப்‌ பிறந்த எவரையும்‌ ஏமாற்றியதில்லை மரணம்‌. பெற்றோர்‌, மனைவி, பிள்ளைகள்‌ உயிருடன்‌ இருக்கும்போது எதிர்பாராமல்‌ நிகழ்ந்த உங்கள்‌ பிரிவு எங்களை மட்டுமல்ல இரத்த உறவுகளையும்‌ நிலைகுலையச்‌ செய்துவிட்டது. எங்கள்‌ குடும்பத்தின்‌ சகல நிம்மதியையும்‌ தொலைத்துவிட்டுத்‌ தவிக்கின்றோம்‌. இந்நிலை என்றும்‌ மாறப்போவதுமில்லை மறையப்‌ போவதும்‌ இல்லை. உங்கள்‌ ஆத்ம சாந்திக்கு எமது பிரார்த்தனைகள்‌.

முதலாம்‌ ஆண்டு நிறைவு நினைவஞ்சலிக்‌ கிரிகை 10.09.2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை எமது இல்லத்தில்‌ நடைபெறும்‌. இந்த ஆத்ம சாந்திப்‌ பிரார்த்தனையில்‌ கலந்து கொள்ள வருகை தருமாறு எங்கள்‌ உறவுகளையும்‌ நண்பர்களையும்‌ அன்புடன்‌ அழைக்கின்றோம்‌.



மனைவி தனுஜாவும்‌ பிள்ளைகளும்‌
தந்‌தை  சிவானந்தராஜா
சகோதரி சிமீத்தா செல்வச்சந்திரன்‌
குடும்பத்தினர்‌.

இல: 43, பழைய கல்முனை வீதி,
கல்லடி, மட்டக்களப்பு
தொலை பேசி-  065-2227456' &   077-0651787

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka