இத்தரணியில் எங்களுடன் மானிட உருவில் குடியிருந்து எமக்காகவே வாழ்நாளின் ஒவ்வொரு நொடிகளையும் அர்ப்பணித்து பல தியாகங்களை செய்து எங்கள் குடும்பத்தின் ஓர் கலங்கரை விளக்காய் திகழ்ந்து ,வழிகாட்டி, வழிப்படுத்தி சமுகந்தனில் நற்பிரஜையாய் " ஓர் உன்னதமான தந்தை" நீங்கள் அப்பா. வழமை போன்று நீங்கள் புதிய ஆண்டுத் தொடக்கமான 2024.01.01 அன்று தங்கள் இஷ்ட தெய்வமான ஸ்ரீ சகலகலையம்பாளின் ஆலய முன் சந்நிதியில் பிரார்த்தனையின் போது தங்களின் ஜீவாத்மாவானது பரமாத்மாவுடன் கலந்து தெய்வத்திற்குள் தெய்வமான நிகழ்வானது அம்பாள் மீது நீங்கள் கொண்ட அதீத தெய்வபக்தியை எமக்கு உறுதிப்படுத்தியது.
இத்தரணியில் உங்களது கடமைகளையும் , பொறுப்புக்களையும் செவ்வென யாதுமோர் குறைவின்றி மிகச்சிறப்பான முகாமைத்துவ , தலைமைத்துவ மற்றும் மனித நேயப்பண்புகளுடன் நிறைவேற்றி வாழ்ந்த மானிட தெய்வம் நீங்கள் அப்பா. எங்களின் ஒவ்வொரு நல்லசெயல்களிலும் , வளர்ச்சியிலும் உங்களின் ஆலோசனைகளும், வழிகாட்டல்களும் மற்றும் நிதிப்பங்களிப்புக்களும் எங்களுக்கு தவறியதேயில்லை அப்பா.
சமூகந்தனில் உங்களுக்கிருந்த நன்மதிப்பையும், அந்தஸ்த்தினையும், சுயமரியாதையையும் தங்கள் இறுதி நிகழ்வு தினம் எமக்கு புலப்படுத்தியது. வாழ்க்கையென்பது இந்த விநாடி மட்டுமே உண்மையென்பதும் மறு விநாடி பொய்யென்பதனையும் நீங்கள் நிரூபித்து கடவுளின் திருவடிதனில் சென்றுள்ளீர்களே அப்பா.
எங்கள் குடும்பத்தின் குல விளக்காக திகழ்ந்து நின்று குடும்ப வளர்ச்சிக்கு உறுதியான கொழுகொம்பாகவும், முதுகெலும்பாகவும் பெருமை சேர்த்து திடீரென இறைவனடி சேர்ந்தமையை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் இறைவனின் நியதியையும், கால பகவானின் காலத்தின் கட்டாயத்தினையும் நாங்கள் ஏற்றுக்கொண்டு உங்கள் ஜீவாத்மாவனது பரமாத்மாவுடன் சிறப்புற கலந்து சாந்தி பெற்று தெய்வத்திற்க்குள் தெய்வமாக எங்களின் காவல்தெய்வமாக நின்று ஆசீர்வதித்து எமைக்காக்க எல்லாம் வல்ல தங்களின் ஸ்ரீ சகலகலை அம்பாளினை நாங்கள் ஒவ்வொருவரும் பிரார்த்திக்கின்றோம் அப்பா.
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !
என்றும் உங்கள் நினைவுகளுடன் வாழும் அன்பு மனைவி , பிள்ளைகள் , மருமக்கள், பேரப்பிள்ளைகள் , சகோதர சகோதரிகள் , மச்சாள்மார் , மச்சான்மார் மற்றும் உற்றார் உறவினர்கள்.
பிரதானவீதி , திருக்கோவில் 02
0672265106
0771510588