அமரர் திருமதி அன்னலெட்சுமி சிவலிங்கம்
பெரியகல்லாறை பிறப்பிடமாகவும் கல்லடியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் அன்னலெட்சுமி சிவலிங்கம் ( ஓய்வு பெற்ற ஆசிரியர் ) அவர்கள் 26.04.2025 சனிக்கிழமையன்று இறைபதம் அடைந்தார் .
அன்னார் காலஞ்சென்றவர்களான பூபாலப்பிள்ளை, ஸ்ரீரங்கம் அவர்களின் இளைய மகளும் , காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், செல்வரட்ணம் அவர்களின் மருமகளும் ,
அமரர் சோமசுந்தரம் சிவலிங்கம் (ஓய்வுபெற்ற விஞ்ஞான உதவிக் கல்விப் பணிப்பாளர்) அவர்களின் பாசமிகு மனைவியும் ,
சோமஸ்கந்தன் அவர்களின் அன்புத் தாயாரும் , தனுஷா அவர்களின் பாசமிகு மாமியாரும் , டக்ஷேஷ் மற்றும் தாரகேஷ் ஆகியோரின் அப்பம்மாவும் ,
அமரர்கள் தவமணி தியாகராஜா, சங்காரவேல், கணேசலிங்கம், காராளசிங்கம் , திரு.பத்மநாதன் ஆகியோரின் அன்பு சகோதரியும் ,
திருமதி தவமணி அச்சுதானந்தன் , அமரர்கள் தியாகராஜா , சிவஞானசௌந்தரி , முத்துலெட்சுமி , திருமதி பரிமளம் , திருமதி சுபத்திராதேவி ஆகியோரின் மைத்துனியும் ,
சங்கர், சுகுமார், சுமன், சுதன், சுகந்தன், சுதமதி, சுஜீவ், சாந்தகுமார், கணேஷ், வாசுகி, சஞ்ஜித், வாஜிதா, அஜந்தன், ரெஹாணி, ரவிசங்கர், ரகுசங்கர் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார் .
அன்னாரின் பூதவுடல் 186, புதிய கல்முனை வீதி, கல்லடி மட்டக்களப்பில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 2025-04-27 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, தகனக்கிரியைகளுக்காக கள்ளியங்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்
குடும்பத்தினர்
0652222861
1 comments:
ஆழ்ந்த இரங்கல்கள் . அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் .
Post a Comment