Saturday, December 24, 2011

அமரர் திருமதி. தங்கம்மா சந்திரசேகரம்




ஆரையம்பதிதனிலே நல் ஆசானாய்
அனைவரையும் அரவணைத்த எம் தாயே
ஆறாத்துயரில் எம்மையெல்லாம் ஆழ்த்திவிட்டு
ஏனம்மா மீளாத்;துயரில் கொண்டாய்!

கலைகளின் உறைவிடமாய் நீ இருந்து
கலாபூசன விருது நீ பெற்று
கலை வளர்த்த எம் தாயே
கண்; கலங்கி நிற்;கின்றோம் கண்திறந்து பாரனம்மா!

ஈழமணி நாட்டினிலே ஆரையூர்
ஈன்றெடுத்த தங்கம்மா-சந்திரசேகரம்
இருவரும் பிட்டுக்கு மண்சுமந்த கதைதன்னை
நாட்டிய நாடகமாய் நடித்த காட்சியை மறப்போமா?

சிவனேஸ்வரர் ஆலயத்தின் வளர்ச்சிக்காய்
சிந்தித்து! எமக்கு நல்ல அறிவுரைகளையும்
ஆற்றல் மிக்க புராணக் கதைகளையும், பஜனைகளையும்
அள்ளித்தந்த எம்தாயே உன்னை மறவோமே!

ஆலமரமாய் நீங்கள் வாழ்ந்து – அதில்
ஆயிரம் ஆயிரம் பறவைகளை இளைப்பாறவைத்து
ஆன்மீக கருத்துக்களை அள்ளி அள்ளித்தந்த
எம் தாயே உன் சிரித்த முகத்தை மறவோமே!

நிமிர்ந்த நடையும் நேரிய பார்வையும்
திண்ணிய நெஞ்சமும் தெளிந்த நல்லறிவும்
அஞ்சாத நெஞ்சமும் ஆழ்ந்த சிந்தனையும்
கொண்ட எம் தாயே உன்னை மறவோமே!

அன்னாரின் பூதவுடல் 2011.12.25 (ஞாயிற்றுக்கிழமை) பி.ப 03:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு ஆரையம்பதி பொதுமயானத்தில் நல்லடக்கம்செய்யப்படும்





பிரிவால் துயரடையும்
                                -ஆரையம்பதி சிவனேஸ்வரர் ஆலய பரிபாலன சபையினர்-






Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka