Obituary - Battinews.com

Wednesday, July 29, 2015

3 வது நினைவஞ்சலி - அமரர் சிவலிங்கம் யோகராசா

                                                 
      3வது நினைவஞ்சலி
அமரர் சிவலிங்கம் யோகராசா

அருள்நேசபுரம் , கடுக்காமுனை

மூன்றாhண்டு காலம் முடிந்ததென்று சொல்கிறார்கள்
முந்த நாள் தான் வந்து நீங்கள் சென்றது போல் உள்ளதையா
ஆண்டு பல நூறு இங்கே அவனியிலே சென்றாலும்
ஆறிடுமா ஆருயிரே அவதியுறும் எங்கள் நெஞ்சு

சிட்டுக் குருவிரெண்டை சிறகடிக்கும் அன்னையோடு
வட்டமிட்டு சைக்கிளேற்றி வலம் வந்து மகிழ்ந்த நிலா
பட்டென்று எளியிழந்து பரதவிக்க விட்டுவிட்டு
திட்டமொன்று சொல்லாமல் திசைமாறி போனதேனோ

அப்பா அப்பா என்று அழும் குரல்கள் கேட்கல்லையோ
அன்பு மக்கள் எங்களையும் அணைக்க மனம் விரும்பல்லையோ
தப்பேதும் செய்திருந்தால் தந்தையே மன்னியுங்கள்
தவிக்கின்றோம் உன்னைத்தேடி தயவு செய்து வந்திடுங்கள்

தகவல்
யோ.ஜெயசுதா(மனைவி)
யோ.அருண்காந், யோ.டெவின்காந் (பிள்ளைகள்)

Friday, July 17, 2015

வீட்டுக்கிருத்தியமும் அந்தியேட்டியும் -புவனேஸ்வரி ஸ்ரனிஸ்லோஸ்

 மண்ணில் 24.07.1927         -     விண்ணில் 19.06.2015
புவனேஸ்வரி ஸ்ரனிஸ்லோஸ்
(ஓய்வுபெற்ற ஆசிரியை)

அன்னாரின் மரணச்சடங்கில் கலந்து கொண்டு துன்பத்தை எம்முடன் பகிர்ந்து கொண்ட உற்றார் உறவினர் அனைவருக்கும் எமது
குடும்பத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்து கொள்வதுடன் 19.07.2015 அன்று அன்னாரின்  அந்தியேட்டிக் கிரியைகளிலும் கலந்து ஆத்ம
சாந்திக்காகப் பிரார்த்திக்குமாறும் கேட்டுப் கொள்கிறோம்.
-குடும்பத்தினர்-

12, ஏரன்ஸ் லேன், தாண்டவன்வெளி, மட்டக்களப்பு.

தகவல் மகன்- எஸ்.ரவீந்திரா

Thursday, July 2, 2015

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி ! அமரர் திருமதி சிவபாக்கியம் சதாசிவம்


அன்னைக்கு அடையாளமாகத் திகழ்ந்தவள் நீ!

அன்பின் அகராதியாய் வாழ்ந்தவளும் நீ!

அரிய பண்புகளால் குடும்ப அரியாசனம் அலங்கரித்தவள் நீ!

அனைத்தும் அமைந்த வாழ்வின் அத்திவாரமும் நீ!

அபாரமான குண நலன்களால் குன்றின் ஒளி நீ!

அழுகையே அறியாமல் எமை ஆளாக்கியவள் நீ!

அதையேன் நிரந்திரமாக்கி அமரத்துவம் ஆனாய்!

ஆணையாத ஒளியாக அகத்தில் என்றும் நீயேஷ


தகவல்- உங்கள் பிரிவால் துயருறும்,
பிள்ளைகள்,மருமக்கள், பேரப்பிள்ளைகள்

சின்னத்துரை வீதி,
பெரியகல்லாறு – 03,
கல்லாறு.

தொ.பே இல - 0772301693

Tuesday, June 30, 2015

41ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் | அமரர் சச்சிதானந்தம் - மதிதயன்


மண்டூரைச் சேர்ந்த, சச்சிதானந்தம் - மதிதயன் ஆகிய எனது கணவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி அகால மரணமெய்திய செய்தி கேட்டு, அன்னாரின் ஈமக்கிரியைகளில் கலந்து கொண்டு பல வழிகளிலும் உதவியுள்ள உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் நேரடியாகவும், தொலைபேசியிலும் ஆறுதல் தெரிவித்தோருக்கும் கண்ணீர் அஞ்சலிப் பிரசுரங்கள், பதாதைகள் வெளியிட்டோருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன் அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை எதிர்வரும் 05.07.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவிருப்பதால், அதில் கலந்து கொண்டு பிரார்த்திக்குமாறும், அதனைத்தொடர்ந்து இடம்பெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றேன்.
-தகவல்-
திருமதி தனுஜா-மதிதயன்(மனைவி)
1ம் பிரிவு, மண்டூர்.

Saturday, June 20, 2015

25ம் ஆண்டு நினைவஞ்சலி | அமரர். மாரிமுத்து கணேசமூர்த்தி

25ம் ஆண்டு நினைவஞ்சலி  | அமரர். மாரிமுத்து கணேசமூர்த்தி
 அன்னையின் மடியில் -  1947.11.05  
  ஆண்டவன் பாதத்தில் 1990.06.21
அன்பிற்கு இலக்கணமாய் பண்பிற்கு இமயமாய் பாசத்தின் பிறப்பிடமாய் எம்மை வளர்த்து கல்வி அறிவூட்டி வளமான வாழ்வுக்கு வழிகாட்டியாய் இருந்து எல்லோரையும் வாழவைத்த எங்கள் அன்புத் தெய்வமே,
நீங்கள் மறைந்து இருபத்தைந்து வருடங்கள் ஆனாலும் ஆறாது எங்கள் துயர்.
உங்கள் ஆத்மா இறைவனிடத்தில் என்றும் இருக்க இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கும்,

அன்பு மனைவி- க.சாரதாதேவி,பிள்ளைகள்,மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள்.

பேச்சியம்மன் கோயில் வீதி,
வாழைச்சேனை.

தகவல் - சறோஜினிதேவி தயாளன் (மகள்)

Thursday, June 11, 2015

இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி - அரசரெத்தினம் மயூரன்

அரசரெத்தினம் மயூரன்  
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி - 14.06.2015 

Saturday, June 6, 2015

மரண அறிவித்தல் திருமதி ஜெயமலர் பற்குணானந்தம்08, சூரிய லேன் மட்டக்களப்பை பிறப்பிடமாகவும், 12/5,  பழைய கல்முனை வீதி, கல்லடியை வசிப்பிடமாகவும் கொண்ட
திருமதி ஜெயமலர் பற்குணானந்தம் 05.06.2015 திகதி வெள்ளிக்கிழமை அன்று இறை பதம்எய்தினார்.

அன்னாரின் பூதவுடல் 07.06.2015 ஞாயிறுக்கிழமை அன்று பி.ப. 4.00 மணியளவில் 12/5, பழைய கல்முனை வீதி, கல்லடி, மட்டக்களப்பில் இருந்து தகனக்கிரியைகளுக்காக மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து பொது மயானத்திக்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் - குடும்பத்தினர்

Obituary - Battinews.com Copyright © 2011 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka