
ஈராண்டு முடிந்ததையா இருள் சூழ்ந்து என் வாழ்வில்
இறுதிவரை ஓயாது உன் நாமம் என் நாவில்
உன் தேகம் சரிந்த போது என் உடலும் வீழ்ந்திருக்கும்
எம் புதல்வர் நலன் கருதி இவ்வுலகில் இன்னுமுள்ளேன்
அப்பா என்று சொல்லி அயல் வீட்டில் ஓசை வந்தால்
அப்பா உங்கள் நினைவோடு அழுகை வரும்
பாசம் கொண்ட எங்களை பரிதவிக்க விட்டு மண்ணில்
தூரதேசம் சென்று தூங்கியது ஏனப்பா?
பெற்ற மனம் ஏங்குதடா பேதலித்து அழுகுதடா
சுற்றமும் உனைத்தேடி சோர்ந்திங்கே நிற்குதடா
பற்று வைத்த உறவையெல்லாம் பரிதவிக்க விட்டு விட்டு
சற்றுமே உரைத்திடாமல் தாயை விட்டு போனதேனோ?
நீ சுடு சொல் உரைத்தறியேன் நான் சொன்ன வார்த்தை மறுத்தறியேன்
எதிர்ப்புக்கள் காட்டி ஏதும் நீ தடுத்தறியேன்
அடுத்தவரின் சேதி பேசி அயலவரை நீ இழித்தறியேன்
அதற்காகவே தான், ஆண்டவனை துதிக்கின்றேன் - உன்
ஆத்மா சாந்தி வேண்டி.
தகவல்
யோ.ஜெயசுதா - மனைவி
0773556020