Wednesday, December 24, 2014

மரண அறிவித்தல் - சிறிதரன் கண்ணமுத்து

அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகவும், தம்பிலுவில், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிறிதரன் கண்ணமுத்து அவர்கள் 24-12-2014 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா(இளைப்பாறிய ஆசிரியர்) சின்னத்தங்கம் தம்பதிகளின்  அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற கண்ணமுத்து(ஆசிரியர்), புவனேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி(இளைப்பாறிய ஆசிரியர்- தம்பிலுலில்) மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேவகிருபா(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெரூஷன்(York University), டெஷானி, சஞ்சிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இரவீந்திரன்(கனடா), சுகந்தி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராகவி அவர்களின் அன்பு மாமனாரும்,

சுந்தரமகேசன்(கனடா), சுகிர்தராணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஷேமிலா, மதுஷானி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 30/12/2014, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 30/12/2014, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada
நல்லடக்கம்
திகதி: செவ்வாய்க்கிழமை 30/12/2014, 02:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada


Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka