அம்பிளாந்துறையை பிறப்பிடமாகவும், அரசடித்தீவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்து கடந்த 12.06.2023 திங்கட்க்கிழமை அன்று சிவபதமடைந்த எமது குடும்பத் தெய்வத்தின் இறுதி கிரியைகளில் கலந்து கொண்டு ஆறுதல் அளித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், உள் நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் தொலைபேசி ஊடாகவும், இணையமூடாகவும் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்மாலை, துண்டுப்பிரசுரம், பதாதைகள் ஊடாக அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும், நேரில் கலந்து கொண்டு அனைத்து வழிகளிலும் உதவி நல்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகளைக் காணிக்கையாக்குன்றோம்.
அன்னாரின் சிவப்பதபேறு குறித்த 31ம் நாள் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் 12.07.2023 புதன்கிழமை அன்று அரசடித்தீவில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற இருப்பதனால் அத்தருணம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
இங்கனம்: குடும்பத்தினர்
சனசமூக நிலைய வீதி
அரசடித்தீவு
கொக்கட்டிசோலை.
0 comments:
Post a Comment