(சமாதான நீதவான், முன்னால் உபதபாலதிபர், நாதனை கரையாக்கண்கண்டி – வட்டவிதானை)
வெல்லாவெளியைப் பிறப்பிடமாகவும் களுவாஞ்சிகுடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் நல்லதம்பி – பாலசுந்தரம் அவர்களின் ஐந்தாண்டு நினைவஞ்சலிப் பிரார்த்தனை 02.06.2022 இன்று எமது இல்லத்தில் நடைபெறுகின்றது.
எங்கள் அன்புத் தெய்வமே! நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து ஆண்டுகள் ஐந்து ஆனதுவே!
வருடங்கள் ஐந்து கடந்தும் மீளவில்லை உங்கள் நினைவிலிருந்து அப்பாவே!
எத்தனை உறவுகள் இருந்தபோதிலும் உங்கள் உறவுக்கு ஈடாகாது! உங்களோடு வாழ்ந்த அந்தக் காலங்கள் தான் எங்கள் வாழ்வின் பொற்காலங்கள். அன்பின் திருவுருவாய் எமக்கு வழிகாட்டியாய் எமது இதயங்களில் அணையாத சுடராய் என்றும் இருப்பீர்கள்.
என்றென்றும் உங்கள் நினைவுகளோடு வாழ்கிறோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம்.
உங்கள் பிரிவுத் துயரில் வாடும் அன்பு மனைவி, பாசம் நிறைந்த மக்கள், அருமை மருமக்கள், ஆசைப் பேரப்பிள்ளைகள், இனிய மைத்துனர்கள், மைத்துனிகள், உடன் பிறவா சகோதர சகோதரிகள், நல்ல உறவுகள்.
தகவல்
குடும்பத்தினர்
மாரியம்மன் கோவில் வீதி,
களுவாஞ்சிகுடி.
தொலைபேசி 0779731458
0 comments:
Post a Comment