கடந்த 22.06.2022 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்த துறைநீலாவணை 5ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வதிவிடமாவும் கொண்டிருந்த சாமித்தம்பி அருளம்பலம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி 22.07.2022 அன்று துறைநீலாவணையிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெறும் என்பதனை உற்றார்,உறவினர் மற்றும் நண்பர்களுக்கு அறியத் தருகின்றோம்.
அன்னார் இறைபதமடைந்த செய்தி கேட்டு உடன் வந்து துயரத்தில் பங்கு கொண்டவர்களுக்கும் தொலைபேசி வழியாக அனுதாபம் தெரிவித்தோருக்கும் மேலும் பல வழிகளிலும் உதவி புரிந்த உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் .
தகவல்-
சா.தேவசகாயம்
சா.இராஜேந்திரன்
சா.மகாலிங்கம்
த.பவானிதேவி
அன்பின் திருவுருவே ஆருயிரே
துன்பத்தில் எமை ஆழ்த்தி நெடுந்தூரம் சென்றதென்ன
பிரிவுகள் நிஜமானவை என்று தெரிந்தும்
ஏற்க மறுக்கிறது எங்கள் மனம்
சத்தியமாய் என்றும் உமை மறவோம்
சாந்தி கொள்ளுங்கள்
0 comments:
Post a Comment