Obituary - Battinews.com

Wednesday, October 8, 2025

20th REMEMBRANCE - MR.C.S.CANAGARATNAM


Monday, October 6, 2025

இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி - அமரர் பொன் செல்வராசா





மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் உயர்திரு பொன் செல்வராசா அவர்களின் ஈராண்டு நினைவு வணக்கம்..!

விடைபெற்றார் எங்கள் தலைவர் செல்வராசா !
விதிவந்து அழைத்ததால் அமரர் ஆனார் !
கதிகலங்கி நாங்கள் அழுதோமே அப்பா !
கைகூப்பி கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறோம் !
ஈராண்டு ஆனாலும் எம் நெஞ்சம் மறக்காது !
இருள்போக்கி ஒளிதந்த எம் குலத்தெய்வம் !
சொல்லாமல் கொள்ளாமல்
விண்ணகம் சென்றுவிட்டாயே...

எழுபத்தேழு ஆண்டுகளாய் இம்மண்ணில் வாழ்ந்து..
எங்களை பாரினில் உயர்த்தி பயணித்தாயே...
இடைநடுவில் இறைவன் ஏன் எடுத்தாரோ.
ஆயிரம் கரங்கள் உறுதுணையாக இருந்தபோதும்
உங்கள் கரங்கள்தானே நம்பிக்கை எமக்கு தந்தது !
இறைபதம் அடைந்தீரே இனி எங்கு காண்போம் !


ஈராண்டு நினைவில் ஏங்கித்தவிக்கும் .
அன்பு மனைவி,
ஆசைப்பிள்ளைகள்.மருமக்கள், பேரக்குழந்தைகள்.

புகையிரதநிலைய வீதி மட்டக்களப்பு.

Saturday, August 23, 2025

யோசப் நவரெட்ணம் - நான்காம் ஆண்டு நினைவஞ்சலி

 



ஆண்டுகள் நான்கு சென்றாலும் உங்கள் நினைவுகள் எப்போதும் எம்மை விட்டு அகலாது. அப்பிச்சி உங்களை தினம் தினம் நினைத்து நினைத்து ஏங்குகின்றோம். நீங்கள் இல்லை என்பதை எண்ணி கண்ணீர் மல்க நிற்கின்றோம்.

உங்களது புன்னகை இன்னும் எங்கள் மனதில், உங்கள் குரல் இன்னும் எங்கள் காதுகளில். ஆனால் உங்களை நாங்கள் பார்க்க முடியாது என்ற உண்மை மட்டும் எம்மை வாட்டுகின்றது அப்பிச்சி.

உங்களை நாங்கள் என்றும் மறவோம். எங்கள் இதயங்களில் நீங்கள் என்றும் வாழ்கின்றீர்கள் அப்பிச்சி, காலங்கள் கடந்தாலும், ஆண்டுகள் சென்றாலும் உங்கள் மனைவி, மகள்மார் , மருமகன்மார் , பேரப்பிள்ளைகள் மனதில் என்றும் நிலைத்திருப்பீர்கள் அன்பின் அடையாளமாக அப்பிச்சி.

தகவல்.
குடும்பத்தினர் .
வந்தாறுமூலை.

Friday, January 17, 2025

மரண அறிவித்தல் - அஜந்தன் திரிஷான்


பிரித்தானியா லண்டன் Ilford ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரிஷான் அஜந்தன் அவர்கள் 06-01-2025 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், அஜந்தன் சத்தியா தம்பதிகளின் பாசமிகு மகனும், பூபாலப்பிள்ளை பத்மநாதன்(சொலிசிற்றர்- லண்டன், சட்டத்தரணி- இலங்கை, அவுஸ்திரேலியா, மனித உரிமையாளர்- இலங்கை), சுபத்திராதேவி பத்மநாதன்(ஓய்வுநிலை ஆசிரியை- அர்ச் மிக்கேல் கல்லூரி, மட்டக்களப்பு, றோயல் கல்லூரி- கொழும்பு) தம்பதிகள், காலஞ்சென்ற கதிரேசன் 
கந்தப்பன் (ஓய்வுநிலை அதிபர்), வள்ளிநாயகி கந்தப்பன்  தம்பதிகள், காலஞ்சென்ற திரு.திருமதி கணேசலிங்கம் தம்பதிகள்(தமிழ் விடுதலைக் கூட்டணி- பாரளுமன்ற உறுப்பினர்), காலஞ்சென்ற திரு.திருமதி சங்காரவேல்(ஓய்வுபெற்ற மாவட்டச் செயலாளர்- மட்டக்களப்பு) தம்பதிகள், திரு.திருமதி காரளசிங்கம்(கிராம சேவை உத்தியோகத்தர்) தம்பதிகள், அன்னலட்சுமி சிவலிங்கம் தம்பதிகள்(ஓய்வுபெற்ற ஆசிரியை), காலஞ்சென்ற தவமணி தியாகராஜா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

உதயா, கீதா, நந்தினி, மாலா, ஜெயந்தினி, காலஞ்சென்ற தர்மலிங்கம், கிருபா, லவக்குமார், மதன், சங்கர், சுகுமார், சுமன், சுதன், சுகந்தன், சுஜிவ், அம்ஜித்குமார், கமலராஜா, நிரோஜன், ரவிராஜ், முகுந்தன், முரளி, குகன், வாசுகி, வாஜிதா, சஞ்ஜித் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

பாபு, ஷோபனா, சுமி, பிரகாஷினி, பிருதிவினி, நிலுஷினி, கார்த்திகா, கிருஷ்ணி ஆகியோரின் அன்பு மருமகனும்,

பிரியந்தன், லவண்யா, துஷியந்தன், கிர்ஷான், பிரமிகா, தர்மிகா, ஷாகரி, சுருதி, அஸ்வின், கோபிஷான், கேசகி, ஹரிஸ், சாகாஸ், கிருஷிக்கா, கரிக்ஷன், சர்வின் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

சாந்தாதேவி விக்னேஸ்வரன், காலஞ்சென்ற ஜெயராணி சிவபாலன், செல்லையா நந்தகுமார், இந்திராணி இராஜேந்திரன், காலஞ்சென்ற செல்லையா கிருஷ்ணராஜா, செல்லையா லோகநாதன், காலஞ்சென்ற நளேந்திரன் ஜமுனா மகாலிங்கசிவம், சியாமளாதேவி திருச்செல்வநாதன், கனகம்மா ஆகியோரின் பெறாவழிப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு : +447405997114   /  +447405644694

Friday, December 20, 2024

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - இளையதம்பி குழந்தைவேல் .



இத்தரணியில் எங்களுடன் மானிட உருவில் குடியிருந்து எமக்காகவே வாழ்நாளின் ஒவ்வொரு நொடிகளையும் அர்ப்பணித்து பல தியாகங்களை செய்து எங்கள் குடும்பத்தின் ஓர் கலங்கரை விளக்காய் திகழ்ந்து ,வழிகாட்டி, வழிப்படுத்தி சமுகந்தனில் நற்பிரஜையாய் " ஓர் உன்னதமான தந்தை" நீங்கள் அப்பா. வழமை போன்று நீங்கள் புதிய ஆண்டுத் தொடக்கமான 2024.01.01 அன்று தங்கள் இஷ்ட தெய்வமான ஸ்ரீ சகலகலையம்பாளின் ஆலய முன் சந்நிதியில் பிரார்த்தனையின் போது தங்களின் ஜீவாத்மாவானது பரமாத்மாவுடன் கலந்து தெய்வத்திற்குள் தெய்வமான நிகழ்வானது அம்பாள் மீது நீங்கள் கொண்ட அதீத தெய்வபக்தியை எமக்கு உறுதிப்படுத்தியது.

இத்தரணியில் உங்களது கடமைகளையும் , பொறுப்புக்களையும் செவ்வென யாதுமோர் குறைவின்றி மிகச்சிறப்பான முகாமைத்துவ , தலைமைத்துவ மற்றும் மனித நேயப்பண்புகளுடன் நிறைவேற்றி வாழ்ந்த மானிட தெய்வம் நீங்கள் அப்பா. எங்களின் ஒவ்வொரு நல்லசெயல்களிலும் , வளர்ச்சியிலும் உங்களின் ஆலோசனைகளும், வழிகாட்டல்களும் மற்றும் நிதிப்பங்களிப்புக்களும் எங்களுக்கு தவறியதேயில்லை அப்பா.

சமூகந்தனில் உங்களுக்கிருந்த நன்மதிப்பையும், அந்தஸ்த்தினையும், சுயமரியாதையையும் தங்கள் இறுதி நிகழ்வு தினம் எமக்கு புலப்படுத்தியது. வாழ்க்கையென்பது இந்த விநாடி மட்டுமே உண்மையென்பதும் மறு விநாடி பொய்யென்பதனையும் நீங்கள் நிரூபித்து கடவுளின் திருவடிதனில் சென்றுள்ளீர்களே அப்பா.

எங்கள் குடும்பத்தின் குல விளக்காக திகழ்ந்து நின்று குடும்ப வளர்ச்சிக்கு உறுதியான கொழுகொம்பாகவும், முதுகெலும்பாகவும் பெருமை சேர்த்து திடீரென இறைவனடி சேர்ந்தமையை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் இறைவனின் நியதியையும், கால பகவானின் காலத்தின் கட்டாயத்தினையும் நாங்கள் ஏற்றுக்கொண்டு உங்கள் ஜீவாத்மாவனது பரமாத்மாவுடன் சிறப்புற கலந்து சாந்தி பெற்று தெய்வத்திற்க்குள் தெய்வமாக எங்களின் காவல்தெய்வமாக நின்று ஆசீர்வதித்து எமைக்காக்க எல்லாம் வல்ல தங்களின் ஸ்ரீ சகலகலை அம்பாளினை நாங்கள் ஒவ்வொருவரும் பிரார்த்திக்கின்றோம் அப்பா.

ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !


என்றும் உங்கள் நினைவுகளுடன் வாழும் அன்பு மனைவி , பிள்ளைகள் , மருமக்கள், பேரப்பிள்ளைகள் , சகோதர சகோதரிகள் , மச்சாள்மார் , மச்சான்மார் மற்றும் உற்றார் உறவினர்கள்.


பிரதானவீதி , திருக்கோவில் 02
0672265106
0771510588

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka