Obituary - Battinews.com

Sunday, January 18, 2026

மரண அறிவித்தல் - நல்லதம்பி தேவநாயகம்பிள்ளை

 


மட்டக்களப்பு ஆரையம்பதியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் நல்லதம்பி தேவநாயகம்பிள்ளை அவர்கள் 16.01.2025 அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நல்லதம்பி செல்லம்மா தம்பதியரின் சிரேஷ்ட புத்திரனும் காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்பு கணவரும் தேவமனோகரி (வைத்தியர், லண்டன்) ஜெயசீலன் (பொறியியலாளர், ஆஸ்ட்ரேலியா), சந்திரிகா (ஓய்வு பெற்ற ஆசிரியர்), சாந்திகுமார் (இந்தியா), யாழினி (வைத்தியர், அமெரிக்கா) ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரியை திங்கட்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று மு.ப 10.00 மணி அளவில் ஆரையம்பதி பொது மயானத்திற்கு நல்லடக்கத்திற்காக எடுத்து செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

Wednesday, October 8, 2025

20th REMEMBRANCE - MR.C.S.CANAGARATNAM


Monday, October 6, 2025

இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி - அமரர் பொன் செல்வராசா





மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் உயர்திரு பொன் செல்வராசா அவர்களின் ஈராண்டு நினைவு வணக்கம்..!

விடைபெற்றார் எங்கள் தலைவர் செல்வராசா !
விதிவந்து அழைத்ததால் அமரர் ஆனார் !
கதிகலங்கி நாங்கள் அழுதோமே அப்பா !
கைகூப்பி கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறோம் !
ஈராண்டு ஆனாலும் எம் நெஞ்சம் மறக்காது !
இருள்போக்கி ஒளிதந்த எம் குலத்தெய்வம் !
சொல்லாமல் கொள்ளாமல்
விண்ணகம் சென்றுவிட்டாயே...

எழுபத்தேழு ஆண்டுகளாய் இம்மண்ணில் வாழ்ந்து..
எங்களை பாரினில் உயர்த்தி பயணித்தாயே...
இடைநடுவில் இறைவன் ஏன் எடுத்தாரோ.
ஆயிரம் கரங்கள் உறுதுணையாக இருந்தபோதும்
உங்கள் கரங்கள்தானே நம்பிக்கை எமக்கு தந்தது !
இறைபதம் அடைந்தீரே இனி எங்கு காண்போம் !


ஈராண்டு நினைவில் ஏங்கித்தவிக்கும் .
அன்பு மனைவி,
ஆசைப்பிள்ளைகள்.மருமக்கள், பேரக்குழந்தைகள்.

புகையிரதநிலைய வீதி மட்டக்களப்பு.

Saturday, August 23, 2025

யோசப் நவரெட்ணம் - நான்காம் ஆண்டு நினைவஞ்சலி

 



ஆண்டுகள் நான்கு சென்றாலும் உங்கள் நினைவுகள் எப்போதும் எம்மை விட்டு அகலாது. அப்பிச்சி உங்களை தினம் தினம் நினைத்து நினைத்து ஏங்குகின்றோம். நீங்கள் இல்லை என்பதை எண்ணி கண்ணீர் மல்க நிற்கின்றோம்.

உங்களது புன்னகை இன்னும் எங்கள் மனதில், உங்கள் குரல் இன்னும் எங்கள் காதுகளில். ஆனால் உங்களை நாங்கள் பார்க்க முடியாது என்ற உண்மை மட்டும் எம்மை வாட்டுகின்றது அப்பிச்சி.

உங்களை நாங்கள் என்றும் மறவோம். எங்கள் இதயங்களில் நீங்கள் என்றும் வாழ்கின்றீர்கள் அப்பிச்சி, காலங்கள் கடந்தாலும், ஆண்டுகள் சென்றாலும் உங்கள் மனைவி, மகள்மார் , மருமகன்மார் , பேரப்பிள்ளைகள் மனதில் என்றும் நிலைத்திருப்பீர்கள் அன்பின் அடையாளமாக அப்பிச்சி.

தகவல்.
குடும்பத்தினர் .
வந்தாறுமூலை.

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka